இரண்டாம் உலகம் - திரைப்பட விமர்சனம்
இரண்டு வேறு வேறு உலகத்தில் நடக்கும் கதை. ஏதோ ஒரு கட்டத்தில் ஒரு உலகம் இன்னொரு உலகத்துக்குள் ஊடுருவுகிறது. அதற்குப் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படம்.
ஓர் உலகம் இன்னொரு உலகத்துக்குள் ஊடுருவ இயலாது என்பதே உண்மை. எனவே அடிப்படையிலேயே இதில் லாஜிக் இல்லை. லாஜிக் இல்லாத திரைப்படங்களை எடுக்கும்போது, படத்துக்குள்ளேயான லாஜிக்கை மிக வலுவாகக் கட்டமைக்கவேண்டும். அப்போதுதான் அதன் சாத்தியங்களுக்குள் பெரிய விளையாட்டு விளையாடமுடியும்.
இன்று உலகத் திரைப்படங்களெல்லாம் நம் கைக்குள் கிடைக்கும் நிலையில், தமிழில் அதே போன்ற ஒரு முயற்சியை மேற்கொள்ளும்போது, நாம் செலுத்தவேண்டிய உழைப்பு பல மடங்கு கூடுதலாக இருக்கவேண்டும். இல்லையென்றால் சாமானிய பார்வையாளன், இதுல ஒண்ணுமே இல்லையே என்றோ, இதெல்லாம் நம்பற மாதிரி இல்லையோ என்று ஒரு வரியில் சொல்லிவிட்டுப் போய்விடுவான். நம்பாத கதையைப் பற்றி யோசிக்கவிடாமல் படத்தின் திரைக்கதையும், அதன் பிரம்மாண்டமும், அதன் தொழில்நுட்பமும் அவனைக் கட்டிப் போட்டிருக்கவேண்டும். அப்போதுதான் அவன் கண்முன்னே திரை நிகழ்த்தும் மாயங்களை அவன் அதிசயித்துப் பார்ப்பான். இதை அவதார் ஏற்கெனவே நிகழ்த்தியிருக்கிறது.

முழுவதும் படிக்க...

மறுமொழிகள்

Who Upvoted this Story

இணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]

irandam-ulagam2.jpg

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'இரண்டாம் உலகம் - திரைப்பட விமர்சனம்'