பண்ணையார் மூவியை வாங்கிய பண்ணையார் TV
ஊரைச்சுற்றி ஏகப்பட்ட நிலபுலன்களை வைத்திருப்பவர்களை பண்ணையார் என்போம். ஊருக்கு ஊர் ஏக்கர் கணக்கில் நிலங்களை வளைத்துப்போட்டிருப்பவர்களை என்னவென்று சொல்வது? அவர்களையும் பண்ணையார் என்றே கணக்கில் வைத்தால்...இன்றை தேதியில் தமிழ்நாட்டில் உள்ள பண்ணையார்களுக்கெல்லாம் பண்ணையார் பாரிவேந்தர் என்கிற பச்சைமுத்துதான். எஸ்.ஆர்.எம். கல்லூரிகள் என்ற பணம் காய்க்கும் மரம் அல்ல, தோப்புகளையே வைத்திருக்கும் பாரிவேந்தர் 'புதிய தலைமுறை' என்ற செய்தி சேனல் தொடங்கினார். அடுத்து...சில மாதங்களுக்கு முன் 'புது யுகம்' என்ற பொழுதுபோக்கு சேனலை ஆரம்பித்திருக்கிறார். பொழுதுபோக்கு சேனல் என்றால்...இந்திய தொலைக்காட்சியில் முதன்முறையாக என்று அடிக்கடி ஒளிபரப்ப திரைப்படங்கள் வேண்டுமே? எனவே தயாரிப்பில் இருக்கும் படங்களின் சாட்டிலைட் ரைட்ஸ்களை வாங்குவதற்காக ஏகப்பட்ட இடைத்தரகர்களை கோடம்பாக்கத்தில் இறக்கிவிட்டிருக்கிறார்கள். அப்படி இறக்கிவிடப்பட்ட இடைத்தரகர்களால் 'புது யுகம்' தொலைக்காட்சிக்கு அடையாளம் காட்டப்பட்ட படம் - விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும். இந்தப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை புதுயுகம் டி.வி. 3 கோடிக்கு வாங்கியிருக்கிறது. பொழுதுபோக்கு சேனலான புதுயுகம் வாங்கிய முதல் திரைப்படம் இதுதான்.

முழுவதும் படிக்க...

மறுமொழிகள்

Who Upvoted this Story

இணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]

pannaiyarum-padmini-gossip.jpg

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'பண்ணையார் மூவியை வாங்கிய பண்ணையார் TV'