திவாலான படநிறுவனத்தின் திடீர் பாய்ச்சல்! அஜித், விஜய், விக்ரம் படங்களை  ஒரே நேரத்தில் தயாரிக்கும் ஐங்கரன்!
எந்திரன் படத்தைத் தயாரிக்க பணமில்லாமல், சன் டி.வி.க்கு கைமாற்றிவிட்டு, கடையைக்கட்டிய ஐங்கரன் இண்டர்நேஷனல், அஜித், விஜய், விக்ரம் நடிக்கும் படங்களை ஒரே நேரத்தில் தயாரிக்குமளவுக்கு பசையுடன் மீண்டும் களத்தில் இறங்குகிறது!
தமிழ்ப்படங்களின் வெளிநாட்டு உரிமைகளை வாங்கி பலப் பல கோடி பணம் பார்த்த லண்டன் கருணாவின் நிறுவனம்தான் ஐங்கரன் இண்டர்நேஷனல்.
லண்டன் கருணா என்று பெயர்தானே தவிர, இவர் இலங்கைத் தமிழர். இவருக்கு தமிழ்ப்படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. கோலிவுட்டில் அவரது நம்பிக்கைக்குரியவராக இருந்த நடிகர் அருண்பாண்டியனை பார்ட்னராக்கிக் கொண்டு தமிழ்ப்படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார்.
1996 – ல் அருண்பாண்டியன் நடித்த ‘கருப்புரோஜா’ படத்தைத் தயாரித்து கையை சுட்டுக்கொண்டிருந்தாலும், 2008 – ஆம் ஆண்டில் மறுபடி வந்தபோதும் அருண்பாண்டியனையே பார்ட்னராக்கினார் கருணா. அவர் மீது அவ்வளவு நம்பிக்கை.
அஜித் நடித்த ஏகன், விஜய் நடித்த வில்லு மற்றும் சர்வம், பேராண்மை, அங்காடித்தெரு, நந்தலாலா, முரட்டுக்காளை என வரிசையாகப் படங்களை தயாரித்த ஐங்கரன் நிறுவனத்துக்கு தொடர்ந்து அடிமேல் அடி.
அஜித்தை வைத்து எடுத்த ஏகன் எடுபடவில்லை.
விஜய்யை வைத்து எடுத்த வில்லு வௌங்கவில்லை.
இப்படியாக ஐங்கரன் கை பட்ட படங்கள் எல்லாமே தோல்வியடைய, ஜெய் நடித்த அர்ஜுனன் காதலி, தங்கர்பச்சானின் களவாடிய பொழுதுகள் ஆகிய இரண்டு படங்களையும் இன்னும் கூட அவர்களால் ரிலீஸ் பண்ண முடியவில்லை.

முழுவதும் படிக்க...

மறுமொழிகள்

Who Upvoted this Story

இணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]

tamil-actor-vijay.jpg

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'திவாலான படநிறுவனத்தின் திடீர் பாய்ச்சல்! அஜித், விஜய், விக்ரம் படங்களை ஒரே நேரத்தில் தயாரிக்கும் ஐங்கரன்!'