ஜில்லா, வீரம் பொங்கலுக்கு வெளிவருமா? பிரியாணி பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை! குட்டையைக் குழப்பிய கோச்சடையான்!
எத்தனை விஜய்கள் இருந்தால் என்ன? அஜித்துகள் அணிவகுத்தால் என்ன? ரஜினி…ரஜினிதான்!

அவரது சக்தியின் வீர்யம் மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது – இப்போது.

அஜித் நடிக்கும் வீரம், விஜய் நடிக்கும் ஜில்லா, கார்த்தி நடிக்கும் பிரியாணி உட்பட அரைடஜன் படங்கள் பொங்கலுக்கு வெளிவருவதாக சொல்லப்பட்டது.

இவற்றில் ஜில்லா, வீரம், பிரியாணி படங்களுக்கு துண்டைப்போட்டு தியேட்டர்களை பிளாக் பண்ணும் வேலையும் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று ரஜினியின் கோச்சடையான் படம் பொங்கலுக்கு, அதாவது ஜனவரி 10 ஆம் தேதியே வெளிவருவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

அடுத்த அரை மணி நேரத்தில் படத்துறையில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

ரஜினியின் கோச்சடையான் படம் வெளியானால் நம்ம படம் ஓடுற தியேட்டர்களில் ஈ ஓட்ட வேண்டியதுதான் என்பதை உணர்ந்து அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக பிரியாணி படத்தைத் தயாரித்த ஸ்டூடியோக்ரீன் அலுவலகத்தில் தீவிர ஆலோசனை நடைபெற்றிருக்கிறது. பொங்கலுக்கு பிரியாணியை ரிலீஸ் பண்ணினால் நல்ல தியேட்டர்கள் கிடைக்காது, எனவே பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்யலாமா என்று ஆலோசனை செய்தனர்.

முழுவதும் படிக்க...

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'ஜில்லா, வீரம் பொங்கலுக்கு வெளிவருமா? பிரியாணி பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை! குட்டையைக் குழப்பிய கோச்சடையான்!'