சிம்பு - ஹன்சிகா காதல் முறிவு..! COUNT DOWN ஐ தொடங்கி வைத்த நயன்தாரா!
கௌதம் மேனன் படத்தில் சிம்பு நடிக்கப்போனதால் பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் புதிய படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்க... திரைமறைவில் வேறு ஒரு விஷயம் சத்தமில்லாமல் நடைபெற்று வந்தது. பாண்டிராஜ் இயக்கும் அந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக எப்படியாவது நயன்தாராவை நடிக்க வைத்துவிட வேண்டும் என்பதே...அது! சிம்புவின் ஆஸ்தான ஜோதிடர் விடிவி கணேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நயன்தாராவுக்கு மிக வேண்டப்பட்ட ஒரு நபர் மூலம் சிம்பு படத்தில் நடிப்பது பற்றிய நயன்தாராவின் எண்ணத்தை முதலில் மோப்பம் பிடித்தனர். நயன்தாராவைப் பொருத்தவரை அவர் கேட்கும் சம்பளத்தைக் கொடுத்தால் இராமநாராயணன் இயக்கத்தில் மிருகங்கள் உடன் நடிக்கவும் தயாராக இருந்தார். சிங்கிள் பேமெண்ட் கொடுத்தால் சிரிப்பு நடிகர் பவர்ஸ்டாருடன் டூயட் பாடவும் தயாராக இருந்தார். ஆக..சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா தயாராக இருக்கிறார் என்று தெரிந்ததும் நயன்தாராவின் பிறந்தநாளுக்கு சிம்பு வாழ்த்து சொன்னார். நயன் தரப்பிலிருந்து பாசிட்டிவ் ரியாக்ஷன் கிடைத்திருக்கிறது. உடனே பாண்டிராஜை கதை சொல்ல அனுப்பி வைத்தார் சிம்பு. கதை கேட்க ஆர்வம் காட்டாத நயன்தாரா தன் கேரக்டரைப் பற்றிப் பேசிவிட்டு, தன் சம்பளத்தை சொல்லி இருக்கிறார். சிம்பு தரப்பில் ஓகே சொல்லப்பட... நயன்தாரா சிம்புவுக்கு ஜோடியான கதை இதுதான்! இவர்கள் இணைந்து நடித்த வல்லவன் படம் 2006 ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு இருவரும் பிரிந்ததால் இணைந்து நடிக்கவில்லை. 7 வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் இணைகிறார்கள். அது சரி...பழைய காதலி உடன் சிம்பு இணைந்தது பற்றி புதிய காதலி ஹன்சிகாவின் ரியாக்ஷன் என்னவாம்? சுந்தர்.சி இயக்கும் அரண்மணை படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் ஹன்சிகா!

முழுவதும் படிக்க...

மறுமொழிகள்

Who Upvoted this Story

இணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]

simbu-nayan-kiss.jpg

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'சிம்பு - ஹன்சிகா காதல் முறிவு..! COUNT DOWN ஐ தொடங்கி வைத்த நயன்தாரா!'