சபரிமலை அய்யப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி ஊர்வலம்: 22–ந்தேதி தொடங்குகிறது
கேரளாவில் உள்ள பிரசித்திப்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா கடந்த மாதம் 15–ந்தேதி தொடங்கியது. நடை திறந்தது முதல் சபரிமலையில் அய்யப்பப் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் காட்டுப் பகுதி வழியாகவும் பக்தர்கள் சன்னிதானத்தை நோக்கி செல்ல தொடங்கி விட்டனர். இதனால் அந்த பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய நிகழ்ச்சியான மண்டல பூஜை வருகிற 26–ந்தேதி நடைபெறுகிறது. அன்று சுவாமி அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து விசேஷ வழிபாடுகள் நடைபெறும். இந்த தங்க அங்கி பந்தளம் அரண்மனையில் இருந்து வருகிற 22–ந்தேதி சபரிமலைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.

முதலில் ஆரமுலா பார்த்தசாரதி கோவிலில் வைத்து தங்க அங்கிக்கு பூஜைகள் நடைபெறுகிறது. பிறகு போனி மகாதேவர் கோவில், பெருநாடு தர்மசாஸ்தா கோவில் வழியாக 25–ந்தேதி தங்க அங்கி பம்பை சென்று அடைகிறது. வழிநெடுகிலும் தங்க அங்கிக்கு பக்தர்கள் வரவேற்பு அளித்து வழிபடுவார்கள்.

முழுவதும் படிக்க...

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'சபரிமலை அய்யப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி ஊர்வலம்: 22–ந்தேதி தொடங்குகிறது'