கனவு திருடன்: லிங்கா :
தமிழ் திரையுலகில் மட்டும் இன்றி, இந்திய திரையுலகிலும் ஒரு முக்கியமான ஐகானாக விளங்குபவர் ரஜினி. அவரிடம் தமிழ் திரையுலகம் என்ன எதிர்பார்க்கிறது என்பது ஒரே வார்த்தையில் சொல்ல முடியாத ஒரு கலவையான வாக்கியம்.. அது இதுதான். “ வணிகத்தை, சுவாரஸ்யத்தை, புதுமையை..” இதில் வணிகத்தை எதிர்பார்ப்பவர்கள் திரைப்பட தயாரிப்பில் இருப்பவர்கள்.. சுவாரஸ்யத்தை எதிர்பார்ப்பவர்கள் ரஜினியின் மீது தீவிர ரசிக மனப்பான்மையுடன் இயங்குபவர்கள்.. புதுமையை எதிர்பார்ப்பவர்கள் சினிமாவின் மீதான தீவிர காதலுடன் இயங்குபவர்கள்.. இந்த மூன்றையுமே அவரால் கண்டிப்பாக பூர்த்தி செய்ய முடியாது என்பது நிதர்சனம்… ஆனால் இந்த மூன்று பிரிவுகளுக்கு இடையே நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றத்தை அவர் புரிந்து கொண்டால், அப்படி ஒரு அதிசயம் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு… வணிகமும் சுவாரஸ்யமும் கூட்டணி போட்டுக் கொண்ட காலத்தில் இருந்து, காலம் உருண்டு வந்து சுவாரஸ்யமும் புதுமையும் கூட்டணி போட்டுக் கொள்ளும் காலத்தில் உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது. புதுமைக்கும் சுவாரஸ்யத்துக்குமான இடைவெளி மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.. ஏற்கனவே நீங்கள் உங்கள் திரைப்படத்தில் காட்டிவந்த சுவாரஸ்யம் எல்லாம், பழமையாக போய்விட்டது.. நீங்கள் புதுமையான சுவாரஸ்யத்தை நோக்கி, அதாவது புதுமையை நோக்கி நகர்ந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். வணிகத்தை பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை.. ஏனென்றால் வணிகத்தை விரும்புபவர்கள் மட்டுமே அந்த மிகச்சிறிய வணிகப் பிரிவுக்குள் இயங்குபவர்கள்… ஆனால் அந்த வணிகத்தை சாத்தியப்படுத்துபவர்கள், தீர்மானிப்பவர்கள் புதுமையையும், சுவாரஸ்யத்தையும் (புதுமையான சுவாரஸ்யத்தை) விரும்பும் பெருவாரியான ரசிகர் பட்டாளம் தான்… இந்த உண்மையை நீங்கள் புரிந்து கொண்டால், பழைய அளவுப்படி தைத்த சட்டைக்குள் உங்கள் உடலைத் திணித்துக் கொண்டு, புதிதாக வந்திருக்கிறேன் என்று எங்களை மீண்டும் ஏமாற்ற எண்ணமாட்டீர்கள் என்று நம்புகிறோம்…

முழுவதும் படிக்க...

மறுமொழிகள்

  1. malarvizhi

    malarvizhi 1459 days ago Permalink

    ‘படையப்பா’விற்குப் பிறகு கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்திருக்கிறது ரஜினி, கே.எஸ்.ரவிகுமார், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி. அதோடு ‘எந்திரன்’ படத்திற்குப் பிறகு 4 வருடங்கள் கழித்து மீண்டும் திரையில் ரஜினி தரிசனம். என்ன செய்திருக்கிறார் ராஜா லிங்கேஸ்வரன்?

Who Upvoted this Story

இணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]

http://i.indiaglitz.com/tamil/news/Lingaa-010914-m.jpg

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'கனவு திருடன்: லிங்கா :'