கதையே இல்லாமல் ஒரு படம்! - புதுமை விரும்பி பார்த்திபனின் ‘பலே’ துவக்கம்...
வைரமுத்து கவிப்பேரரசு என்றால் அவரது மகன் மதன் கார்க்கி கவி சிற்றரசுதானே? (பட்டம் உபயம்- பேச்சு சித்தர் பார்த்திபன்) இன்று பிற்பகல் சுமார் நாலு மணியளவில் அவருக்கு இந்த பட்டத்தை சூட்டினார் பார்த்திபன். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் இயக்கும் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்தின் துவக்கவிழா நிகழ்வில்தான் இப்படி பட்டதாரியாக்கினார் மதன் கார்க்கியை. படத்தின் தலைப்பையும் இப்படி வித்தியாசமாக யோசிக்க பார்த்திபனால்தான் முடியும். அதிருக்கட்டும்… கவி சிற்றரசுவின் ஒரு பாடலை அங்கு வாசிக்க வைத்தார்கள் அவரது குரலிலேயே! ஏற்ற இறக்கத்தோடு அவர் வாசித்து முடிக்க, கிறக்கத்தோடு கேட்டு ரசித்தது நிருபர் கூட்டம்.

பாடலின் சாரம்சமே கதையை பற்றியும், திரைக்கதையை பற்றியும், வசனத்தை பற்றியும், இயக்கத்தை பற்றியும்தான். அதை அழகான தமிழால் கோர்த்திருந்தார் கவிப்பேரரசின் வாரிசு.

இனி படத்தை பற்றி…. ‘என் இரண்டு படங்களை தவிர மீதி படங்கள் அத்தனையும் நானே தயாரித்ததுதான். ஏனென்றால் என்னுடைய வித்தியாசமான முயற்சிகளுக்கு என் பணத்தை செலவு செய்தால்தானே சரியாக இருக்கும். அதனால்தான். கடந்த ஐந்தாண்டுகளில் ஏராளமான கதைகளை எழுதி வைத்திருந்தேன். தயாரிப்பாளர் சந்திரமோகனை பார்த்து ஒரிரு கதைகளை சொல்லியும் வைத்திருந்தேன். அந்த நேரத்தில்தான், ‘நீங்க கதை திரைக்கதை வசனம் இயக்கம்னு ஒரு கதை வச்சுருக்கீங்களாமே, அதை சொல்லுங்க’ என்றார் அவர்.

முழுவதும் படிக்க...

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'கதையே இல்லாமல் ஒரு படம்! - புதுமை விரும்பி பார்த்திபனின் ‘பலே’ துவக்கம்...'