ஆம்ரவனேஸ்வரர் - திருமாந்துறை.
திருச்சி லால்குடி ரயில் நிலையத்திலிருந்து 5 கிலோமீட்டர் மேற்கே அமைந்துள்ள அழகான சிவாலயம் ஆம்ரவனேஸ்வரர் கோவில். திருச்சியிலிருந்தும், லால்குடியிலிருந்தும் பேருந்து வசதிகள் உண்டு. பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே கோவில்.

இறைவன் - ஆம்ரவனேஸ்வரர், மிருகண்டீஸ்வரர்.

இறைவி - அழகம்மை, பாலாம்பிகை.

தல மரம் - மாமரம்.

பொய்கை - காயத்திரி.

புராணப் பெயர் - ஆம்ரவனம், திருமாந்துறை.

பாடியவர் - திருஞானசம்பந்தர்.

வரலாறு! முற்காலத்தில் முனிவர் ஒருவர் இங்கு தவம் இயற்றூம்போது சிவாபச்சாரம் புரிந்ததால் மானாகப் பிறக்கும் சாபம் பெற்றார். குட்டிமானை விட்டுவிட்டு தாயம், தந்தையும் இரைதேடச் சென்றுவிட்டன. வேடன் வடிவ வேடம் கொண்ட சிவன் அவற்றை அம்பால் வீழ்த்தி முக்தியளித்தார். இங்கு குட்டிமான் பசியில் அலறியது. குட்டிக்குப் பார்வதி பால்புகட்டினாள். சிவன் மானை ஆற்றுப்படுத்தினார். மானின் முன்வினைகள் தீர்ந்து மீண்டும் முனிவரானது. முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கு சிவன் கோவில் கொண்டார்.

முழுவதும் படிக்க...

Backlinks Speed test Responsive test Get pagesize Page rank Google SERP Position All tools

SEO report for 'ஆம்ரவனேஸ்வரர் - திருமாந்துறை.'